Posts

மீனைக் காத்த மோடி

மக்கள் படும் வேதனைகளை தாங்க முடியாத மோடி கங்கை கரை சென்று உயிர் துறக்க முடிவு செய்தார், அப்பொழுது கங்கையாற்றில் நீந்திக்கொண்டிருந்த மீனிடம் அய்யகோ ஆற்றில் முதலைகள் அதிகம் நீ கொல்லப்படுவாய் நான் உன்னை காப்பாற்றுகிறேன் எனக் கூறி கரையில் தூக்கி போட்டாராம். அதைப் பார்த்த பக்தர் கூட்டம் சாகும் தருவாயிலும் முதலையிடம் இருந்து மீன் உயிர் காத்த தலைவன் இவன் என போற்றித் திரிந்ததாம்.

விலங்குகளாய்ப் போவோம்

நாங்கள் திரும்பத்திரும்ப ஊழல்வாதிகளையே அரியணை ஏற்றுவோம் ஆனால் திரு சகாயம் போன்றோர் தங்கள் உயிரை பணயம் வைத்து எங்களுக்கு மக்கள் பணியும் செய்ய வேண்டும் என்போம். உடனிருந்தவன் சாண் ஏறினால் முழம் இழுக்க ஆவண செய்வோம், மீறியும் முன்னேறினால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தூற்றித் திரிவோம். ஆனால் எங்களுக்கு மட்டும் உத்தமன் ஒருவன் தலைவனாய் வேண்டும். தலைவன் கண்முன் இருப்பினும்  நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான்களை கண்மூடித்தனமாக ஆலமரம் என்று ஒதுங்கிவிட்டு கண்ணயர்ந்த நேரத்தில்  காணாமல் போனதுடன் அய்யகோ நம்பி மோசம் போனோமே என ஒப்பாரியும் வைப்போம். இவற்றிற்க்கு தீர்வென்பது கண்ணெட்டும் தொலைவில் இல்லை ஆனால் இந்த மனித விலங்குகளை ஒன்றினைத்து சமூகம் உருப்பெறாமல் இருந்திருந்தால்  கோவணமும் தேவையில்லை  அதில் முடிந்து வைக்க பணமும் தேவையில்லை  அதைச் சுருட்டிச் செல்ல திட்டமிடும் மோ(ச)டிகளும் இல்லை  எனவே வாருங்கள் அனைவரும் விலங்குகளாய்ப் போவோம். அங்கும் வலுத்தவன் வைத்தது சட்டமாய் போகும். கூட்டம் சேர்ப்பவன் சுதந்திரமாய் அடித்துத் தின்னலாம்.  என்ன எங்களைப் போல் சமூக கட்டமைப்பை கேள்வி கேட்க யா

யார் பொதுவுடைமைவாதி

சில காணொளிகளை காண நேர்ந்தது, சில கூத்தாடிக் கோமாளிகள் தான் ஆகச் சிறந்த அறிவாளி, பொதுவுடைமைச் சிந்தனாவாதி என்று காட்டிக் கொள்ள இரஷ்ய எழுத்தாளர்களையும் , கியூபப் போராளிகளையும் பற்றி மட்டுமே அரற்றி இருந்தனர், திருவள்ளுவனைத் தாண்டிய ஒரு பொதுவுடைமைவாதியும் இல்லை ஆனால் ஏனோ ஏமாற்றித் திரியும் கூட்டம் கார்ல் மார்கஸையும், சேக்களையும், காஸ்ட்ரோக்களையுமே துணைக்கு அழைக்கிறது. இதுபோன்ற காணொளிகளை காணும் விசிலடிச்சான் குஞ்சுகள் தன் பொதுவுடைமையை மேலுக்கு போடும் சட்டையோடு நிறுத்திக் கொள்கின் றன. ஒருவனும் திரும்பக் கேட்பதில்லை அவன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் அவனது செயலும் அவன் பேசும் சித்தாந்தக்களுக்கு தொடர்புள்ளதா என்று. என் பார்வையில் பொதுவுடமை என்பது படித்து வருவதில்லை அவரவர் சூழ்நிலையில் தன்னைச் சார்ந்த சமூகம் சுரண்டப்படும் போதும், ஒடுக்கப்படும்போதும் ஒருவருக்கு அது தவறாய்த் தெரியுமானால் அவர் பொதுவுடைமைவாதியே... அதற்கு எதிராய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் போராளியே. கடின சித்தாந்தங்களைப் பேசி இன்னும் 50 வருடங்கள் காத்திருக்க வைக்காதீர்
என்றோ ஒரு காட்டுமிராண்டி கூட்டம் கோவிலை இடித்ததற்க்கு பல நூற்றாண்டுகள் கழித்து மசூதியை இடித்து பல உயிர்களை நாசம் செய்த பின்பும் மீண்டும் கோவில் கட்டுவேன் என திரியும் கூட்டம் தமிழர்கள் நம்மை காட்டு மிராண்டி என்கிறது.  அழிந்து போன நாலந்தா பல்கலைக்கழகத்தையோ அல்லது காஞ்சி பல்கலைக்கழகத்தையோ கட்ட முனைந்திருந்தால் சிறப்பு உங்களை அறிவார்ந்த சமூகம் என ஏற்றிருப்போம். அம்மையார் கிரண்பேடிக்களும், மேனகா காந்திகளும் தான் சார்ந்த காட்டுக் கூட்டத்தை திருத்தி விட்டு பொதுவெளிக்கு வருதல் சாலச் சிறப்பு.  உங்கள் ஆரிய குடியில் இவைப் பெருமையாய் தெரியலாம் ஆனால் சமத்துவம் போற்றும் தமிழ்க் குடியில் அல்ல.

காட்டுமிராண்டிகள்

மெத்தப் படித்தாலும் உலகம் சுற்றித் திரிந்தாலும் பிழைப்பிற்கு அடுத்தவர் கால் பிடித்தாலும் சுய சாதி அரிப்பு ஏனோ அடங்கவில்லை... தன்னுடையது தானே என்று மலம் தின்ன முனைவதில்லை... நண்பர்களே உங்கள் சுயசாதி சொறியல்களை உங்கள் வீட்டோடு வையுங்கள் உங்கள் எச்சங்களை பொதுவெளியில் துப்பாதீர்! வலுத்தவன் குரல் வரலாறாக போகிறது... இளைத்தவன் குரல் கூப்பாடாக போகிறது... இரண்டும் மனிதனின் குரல் என மக்கள்  என்று உணர்கிறார்களோ அன்று சமத்துவம் மலரும் கூடவே நல்லாட்சியும்... மாற்றம் நம்மிடமிருந்தே என்று உணராதவரை  மாற்றம் இல்லை நம் வாழ்வில் பின் குறிப்பு : - எனது முகநூல் பக்கத்தில் இன்று முதல்வராக பதவியேற்றவர் தன் சாதி என்ற பிதற்றலை படிக்க நேர்ந்தது, சாதிகளை மறந்து எத்துணை ஏறுதலுவுதல் போராட்டம் நடந்தாலும் இதைப் போன்ற பதிவுகளை படிக்க நேரும் போது அது நாம் இன்னும் காட்டுமிராண்டிகள் தான் என்பதை உணர்த்தியது.

வாருங்கள் சூழ்ச்சி பழகுவோம்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் அரசியலையும் காணவில்லை விழிப்புணர்வையைம் காணவில்லை. வெற்றிடத்தில் நாம் வாள் வீசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை. பசுத்தோல் போர்த்திய குள்ள நரிகள் மீண்டும் பிரித்தாளுகின்றன... திரைப்படம் போல் ஒரே இரவில் தலைவன் உருவாக்கப்படுகிறான் அவரவர் தேவைக்கேற்ப... எதிர்த்தாள வேண்டிய கூட்டம் தன் தந்தை காலத்து நாடகத்தை இன்றும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது திரைப்படங்களின் வரைகலை (graphics and visual effects) முன்னேற்றம் அறியாமல்.. சுயத்தை மட்டுமே யோசிக்கும் கூட்டத்திற்கு நியாயம் பேசும் தலைவன் கிடைக்கப்போவதும் இல்லை. தமிழகமும் தலைநிமிரும் காலம் கண்ணெதிரில் இல்லை... தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மீண்டும் சூதே வெல்லும்! வாருங்கள் சூழ்ச்சி பழகுவோம்!!!

பொதுமையில் பதுமைகளாய்ப் போவோம்

இனி பதினொரு சாத்தான்கள்  வேதம் ஓதத் துவங்கும்... ஏய்த்துப் பிழைக்கும் கூட்டம்  இவர்களுக்கு கட்டியம் கூறும்... புத்தி கெட்ட கூட்டம்  புனிதர்கள் இவரென ஏற்றுக் கொள்ளும் மறந்தும் யோசிக்காதீர்  நேற்றுவரை இவர்கள் செய்த சாதனை என்ன இன்று இவர்களின் உண்மை தேவை என்ன நாளை இவர்கள் மக்களுக்கு செய்யபோகும் சேவை என்ன மறந்தும் கேட்டுவிடாதீர் கேட்டால் முனைந்து எதையும் நினைவில் கொள்ளாதீர்... நேற்று பெற்ற தொலைக்காட்சிப் பெட்டியும், மின் விசிறியும் இன்று பெறும் இரு சக்கர வாகனமும் நாளை வரும் திருமண உதவித்தொகையும் தான் நமக்குத் தேவை... மாக்களே மறந்தும் உணர்ந்திடாதீர்  உணர்ந்தால் கிளர்ந்திடாதீர்... கிளர்ந்தால் சவம் நாடாண்டது தெரிந்துவிடும் சவமாக்கியவர் நாடாள்வது புரிந்துவிடும் மக்களே மாக்களாகவே தொடருங்கள் மனுதர்மம் வெல்லட்டும் சமத்துவம் தொலையட்டும் பொதுமையில் பதுமைகளாய்ப் போவோம்...